Covishield தடுப்பூசி போட்டவர்களுக்கு புதிய பிரச்சினை., நிபுணர்களின் கருத்து என்ன?
Covishield (Oxford-AstraZeneca vaccine) தடுப்பூசி போட்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால், இது குறித்தது தற்சமயம் கவலைப்படத் தேவையில்லை என்று ASH தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் த்ரோம்போசிஸ் (VITT) என்ற பிரச்சினை உருவாகும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
VITT (Vaccine-Induced Immune Thrombocytopenia and Thrombosis) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை, வயிறு போன்ற உடலின் பல இடங்களில் ரத்தம் உறையும் அபாயம் உள்ளது.
இந்த ஆய்வின் விவரங்கள் New England Journal of Medicine-ல் வெளியிடப்பட்டுள்ளன.
உடலின் திசுக்களை தாக்கும் ஆன்டிபாடிகள்
பொதுவாக தடுப்பூசி போட்ட பிறகு, வைரஸை எதிர்த்துப் போராட உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தியாகின்றன. ஒரு வைரஸ் குடலுக்குள் நுழையும் போதெல்லாம், இந்த ஆன்டிபாடிகள் உடனடியாக எச்சரிக்கை செய்யப்பட்டு வைரஸைத் தாக்கி அதைக் கொல்லும்.
ஆனால், சில நேரங்களில் சில தன்னியக்க ஆன்டிபாடிகள் ஆரோக்கியமான செல்கள் மற்றும் உடலின் திசுக்களை தாக்குகின்றன.
உடலில் பிளேட்லெட் காரணி 4 (PF4) எனப்படும் புரதத்தை குறிவைத்து VITT-யை உண்டாக்கும் ஒரு தீங்கு விளைவிக்கும் தன்னியக்க ஆன்டிபாடியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கவலைப்பட வேண்டியதில்லை...
இதற்கிடையில், கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் VITT பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
American Society of Hematology படி, கோவிட் தடுப்பூசியைப் பெற்ற 4 முதல் 42 நாட்களுக்குள் மட்டுமே VTT உருவாக முடியும் என்கின்றனர்.
கடுமையான தலைவலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, முதுகு வலி, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் VITT பிரச்சனை உள்ளவர்களிடம் காணப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
oxford astrazeneca covishield vaccine, VITT, Covid-19 Vaccine Side effects, AstraZeneca's Covishield vaccine rare blood disorder