அமெரிக்கா சீனா தொடர்பில் ஜோதிடக்கலை நிபுணர் தெரிவித்துள்ள சில்லிடவைக்கும் தகவல்
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பயங்கர மோதல் ஒன்று வெடிக்க இருப்பதாக பிரபல ஜோதிடக்கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
வாழும் நாஸ்ட்ரடாமஸ்
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé) என்பவர், பிரித்தானிய மகாராணியாரின் மரணம் முதல் சமீபத்தில் நிகழ்ந்த மைக்ரோசாஃப்ட் குளறுபடி வரை துல்லியமாக கணித்ததால் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைக்கப்படுகிறார்.
சில்லிடவைக்கும் தகவல்
இந்நிலையில், ஏதோஸ், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று வெடிக்கலாம் என கணித்துள்ளார்.
சமீப காலமாக சீனா தனது சந்தையை பெருமளவில் விரிவுபடுத்திவருவதுடன், ரஷ்யாவுடன் நெருக்கமும் காட்டிவரும் நிலையில், சீனா மற்றும் ரஷ்யாவின் இந்த மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு மன நிலை, பெரும் போராக வெடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார் ஏதோஸ்.
குறிப்பாக, சீனா இந்தோ பசிபிக் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முயல்வதும், அமெரிக்காவும் அதன் கூட்டாளர் நாடுகளும் அதற்கு எதிரணியில் நிற்பதும் பிரச்சினைகள் பெரிதாகி போராக வெடிக்க வழிவகுக்கக்கூடும் என்ற கருத்து ஏற்கனவே நிலவிவருகிறது.
ஆக, ஒன்றில், தென் சீனக் கடலில் ஒரு பெரிய சம்பவம் நடக்கலாம், அல்லது உலகையே அதிரவைக்கக்கூடிய ஒரு பெரும் சைபர் தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்றும், அதை யாராலும் தடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார் ஏதோஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |