கிரீஸ் நாட்டு கடலில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து: 3 பேர் வரை உயிரிழப்பு
கிரீஸ் நாட்டு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் புலம்பெயர்ந்தவர்கள்
ஆப்பிரிக்கா நாடுகளில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் ஆகிய நெருக்கடியால் உயிர் வாழ முடியாத நெருக்கடியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இவ்வாறு புலம்பெயரும் மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கி கடல் மார்க்கமாக சிறிய படகுகளில் ஐரோப்பாவிற்குள் குடியேற முயல்கின்றனர்.
ஆனால் இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் வரும் சிறிய படகுகள் துர்திஷ்டவசமாக சில சமயங்களில் கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி விடுகின்றன.
3 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு
அந்த வகையில் தற்போது கிரீஸ் நாட்டின் மைக்கோனாஸ் தீவு அருகே சென்று கொண்டிருந்த புலம்பெயர்ந்தவர்கள் படகு ஏஜியன் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 3 புலம்பெயர்ந்தவர்கள் வரை உயிரிழந்துள்ள நிலையில் 12க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
Marina Militare/AFP/Getty Images
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த கடலோர பொலிஸார் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அத்துடன் மாயமான நபர்களை தேடும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.