165 பக்தர்கள் மரணம்! உத்தரகாண்டில் அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலம் உத்தரகாண்டில் யாத்திரை சென்ற பக்தர்களில் 165 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்
உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் பங்கேற்க உத்தரகாண்டில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் கூடியுள்ளது.
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி அன்று சார்தாம் யாத்திரையானது, கங்கோந்த்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டதுடன் தொடங்கியது.
இதுதொடங்கி இதுவரை 49 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு சென்றவர்களில் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு ஏற்பட்டு
கடினமான மலைப்பகுதி என்பதால் மாரடைப்பு ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் 80 பேர் கேதார்நாத் வழித்தடத்திலும், 48 பேர் பத்ரிநாத் வழித்தடத்திலும், 21 பேர் யமுனோத்ரி வழித்தடத்திலும், 16 பேர் கங்கோத்ரி வழித்தடத்திலும் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
மருத்துவ பரிசோதனையின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு 3 மரணங்கள் வீதம் நிகழ்ந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |