ரஷ்ய போரில் கொல்லப்பட்ட 500 குழந்தைகள்: ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் குறைந்தது 500 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரில் கொல்லப்பட்ட குழந்தைகள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 15 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து இருப்பதுடன் லட்சக்கணக்கான மக்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முழுநீள போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து குறைந்தது 500 குழந்தைகள் உக்ரைனில் கொல்லப்பட்டு இருப்பதாக என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
UNICEF
மேலும் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கையால் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாது என்றும் உக்ரைனிய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட குழந்தைகள்
உக்ரைன் போர் நடவடிக்கையில் ஒருபுறமும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு அத்துமீறிய வகையில் குழந்தைகளை ரஷ்யா கடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
UNICEF
மேலும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகளை மிகப்பெரிய போர் குற்றமாக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் கோரிக்கைகளை முன்வைத்து இருந்தது.
ஆனால் உக்ரைனின் இத்தகைய குற்றச்சாட்டுகளை ரஷ்யா முற்றிலும் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.