பிரான்ஸ் முதல் பெண்மணியின் உறவினர் மீது தாக்குதல்: பின்னணி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடைய மனைவியான பிரிஜிட் மேக்ரானுடைய உறவினர் ஒருவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரான்ஸ் முதல் பெண்மணியின் உறவினர் மீது தாக்குதல்
பிரான்சின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானுடைய உறவினர் Jean-Baptiste Trogneux. அவருடைய குடும்பம், வடக்கு பிரான்சிலுள்ள Amiens நகரில் சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்துவருகிறது.
சமீபத்தில், தங்கள் சாக்லேட் நிறுவனத்தின் முன் நின்றிருந்த Trogneuxஐ சிலர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்கள்.
GETTY IMAGES
இப்படி Trogneuxஉடைய நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லையாம். அதாவது, இமானுவல் மேக்ரான் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே அடிக்கடி இப்படி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றனவாம்.
அதற்குக் காரணம் என்னவென்றால், அந்த நிறுவனத்தின் வருவாயில் மேக்ரானுக்கும் பங்கிருப்பதாக சிலர் கருதுகிறார்களாம். அதை மேக்ரான் தரப்பு மறுத்துள்ளது.
எட்டு பேர் கைது
Trogneux மீது தாக்குதல் நடத்தியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அரசுக்கு எதிராக போராடும் கூட்டத்தைச் சேர்ந்த அந்த நபர்கள் Trogneuxஐத் தாக்கும்போது, மேக்ரானையும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததால், தான் கடும் அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
GETTY IMAGES
Trogneux மீதான தாக்குதலுக்கு, ஜனாதிபதி மேக்ரான் உட்பட பல்வேறு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.