வரிகளின் மகாராஜா... ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியாவை சாடிய அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியா மிகப்பெரிய ஆதாயம் ஈட்டும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீற்றர் நவரோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
35 சதவீதம் வரையில்
அடுத்த வாரம் திட்டமிட்டபடி இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத தண்டனை வரிகள் அமுலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் பெயரளவில் மட்டுமே ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பீற்றர் நவரோ, தற்போது இந்தியாவின் தேவையில் 35 சதவீதம் வரையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், ,அமெரிக்க அச்சுறுத்தலுக்கு பயப்படப் போவதில்லை என்றும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி நீடிக்கும் என இந்தியா சூசகமாக தெரிவித்த நிலையிலேயே பீற்றர் நவரோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
60 டொலர் விலை
2022 ல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா தொடங்கியதிலிருந்து, அந்த நாட்டின் எண்ணெய் வருவாயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஏழு நாடுகளின் குழு ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு பீப்பாய்க்கு 60 டொலர் விலை வரம்பை விதித்ததிலிருந்து, இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது.
மேலும், இந்தியா மலிவான ரஷ்ய எண்ணெயைப் பெறுவதாகவும், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் அதிக விலைக்கு விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |