வான்வழித் தாக்குதல் மூலம் ஜெலென்ஸ்கியைக் கொல்ல முயற்சி; ரஷ்ய உளவாளி கைது
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா மேற்கொண்ட முயற்சியை முறியடித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) தெரிவித்துள்ளது.
தாக்குதல் முன்கூட்டியே அறியப்பட்டதாகவும், ஜெலென்ஸ்கியை பாதுகாப்பாக வைத்திருக்க முடிந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியின் இருப்பிடத்தை ரஷ்யாவிற்கு வழங்க முயன்ற ஒரு கூட்டாளியை கைது செய்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
Reuters
ஜெலென்ஸ்கியின் வருகையின் போது, அந்தப் பெண் அளித்த தகவலைப் பயன்படுத்தி தெற்கு மைகோலேவ் பகுதியில் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக SBU கூறியது.
அந்த பெண் ஜெலென்ஸ்கியின் வருகையின் நேரத்தையும் வழியையும் கண்டுபிடிக்க முயன்றார், ஆனால் SBU அவரது முயற்சிகளை முன்கூட்டியே அறிந்து, அவரது பயணத்திற்கு கூடுதல் பாதுகாப்பைச் சேர்த்ததாக SBU கூறியது.
அந்தப் பெண்ணைக் கண்காணிப்பதன் மூலம், உக்ரைனில் மின்னணு போர் முறைகள் மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிய ரஷ்யா முயற்சித்து வருவதாக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது அடங்கிய குறுஞ்செய்திகளின் திரைக்காட்சிகளை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். ஜெலென்ஸ்கி மீதான தாக்குதல் எப்போது திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ukraine President Volodymyr Zelenskyy, attempt to assassinate Zelenskyy, Russia Ukraine War, Ukraine Russia War, Russia attempt to assassinate Zelenskyy