10,000 அடி உயர மலையில் இருந்து விழுந்து Audi இத்தாலி தலைவர் பலி
Audi இத்தாலியின் தலைவர், ஃபேப்ரிஜியோ லாங்கோ (Fabrizio Longo) ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தில் 10,000 அடி உயரமான மலையில் இருந்து விழுந்து மரணமடைந்தார்.
இந்த சம்பவம், இதாலியின் பிரபலமான ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், செப்டம்பர் 1, 2024 அன்று நிகழ்ந்தது.
62 வயதான Fabrizio Longo, அனுபவமுள்ள மலையேற்ற வீரராக இருந்தார்.
சம்பவத்தன்று, அவர் இத்தாலிய-சுவிஸ் எல்லைக்கு அருகிலுள்ள அடமெல்லோ மலைகளில் சிமா பேயரில் மலையேறும் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.
பயணத்தின் ஒரு கட்டத்தில், சரியான சமநிலையை இழந்து, 10,000 அடிக்குமேல் உயரத்தில் இருந்து கீழே விழுந்து, நிகழ்விடத்திலேயே பலியானார்.
உடனடியாக மலையேற்ற குழுவினர் அவசர சேவைகளை அழைத்தனர். பல மணிநேரம் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்தபோதிலும், லாங்கோவை காப்பாற்ற முடியவில்லை. இறுதியில் அவரது உடல் 700 அடி கீழே கண்டெடுக்கப்பட்டது.
Fabrizio Longo, Audi இத்தாலியின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர் தனது நேர்மையான வழிகாட்டல் மற்றும் துறையில் கொண்டுள்ள பங்களிப்புகளுக்காக பரவலாக மதிக்கப்படும் ஆளுமை. அவரது திடீர் மரணம், ஆட்டோமொபைல் உலகில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
Audi இத்தாலி மற்றும் Volkswagen குழுமம், Fabrizio Longo-வின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |