மியான்மரில் கோரதாண்டவமாடிய நிலநடுக்கம்: சிறைவைக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் கதி என்ன?
மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் கோரத்தாண்டவம் ஆடியுள்ள நிலையில், சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகியின் நிலை குறித்து தெரிய வந்துள்ளது.
10,000த்தை தாண்டலாம்
சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் மியான்மர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம், அதாவது 10,000த்தை தாண்டலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆங் சாங் சூகியின் கதி
இதற்கிடையில், இராணுவத்தால் சிறைவைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகியின் கதி என்ன என்ற கேள்விகள் எழுந்தன.
2021ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட அவர், வீட்டுக்காவலில் இருந்து நேப்பிட்டோவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், ஆங் சாங் சூகி இருக்கும் சிறை நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளதால், அவர் நலமுடன் இருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |