அந்த நாட்டவர்களை மொத்தமாக நாடு கடத்த முடிவெடுத்த ஆஸ்திரியா
சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியை கொண்டாடியவர்களுக்கு பேரிடியாக ஆஸ்திரிய நிர்வாகம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.
புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வு
சிரியா மக்களின் அகதி அந்தஸ்தை ரத்து செய்ய விரும்புவதாகக் கூறி ஆஸ்திரிய அதிகாரிகளிடமிருந்து கடிதத்தைப் பெற்றுள்ளனர். ஆஸ்திரியாவில் சமீப காலமாக புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருகிறது,
கடந்த மாதம் தெற்கு நகரமான வில்லாச்சில் 14 வயது சிறுவனை கத்தியால் தாக்கி கொன்றதற்காக சிரிய நாட்டவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது மேலும் தூண்டப்பட்டது.
அந்த தாக்குதல் சம்பவத்தால் தற்போது சிரியா மக்கள் அனைவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அசாத் அரசாங்கம் வெளியேற்றப்பட்ட பின்னர் டிசம்பரில் பல ஐரோப்பிய நாடுகள் சிரியர்களின் புகலிடக் கோரிக்கைகளை முடக்கின.
நாடு கடத்தும் திட்டம்
சுமார் 100,000 சிரிய மக்கள் வசித்து வரும் ஆஸ்திரியாவில் குடும்ப மறு ஒருங்கிணைப்பை நிறுத்தி, சுமார் 2,900 பேரின் அகதி அந்தஸ்தை ரத்து செய்வதற்கான நடைமுறையைத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன், சிரியாவுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது நாடு கடத்தும் திட்டத்தை முன்னெடுக்க இருப்பதாகவும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சொந்த நாட்டுக்கு திரும்பும் மக்களுக்கு 1,000 யூரோ சன்மானமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இதுவரை 100 பேர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |