குழந்தை ராமருக்கு ஓய்வு தேவை.., 4 மணிக்கு எழுந்து நீண்ட நேரம் கண்விழித்திருப்பதால் நிர்வாகம் எடுத்த முடிவு
அயோத்தி ராமர் கோவில் கதவுகள் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும் என்று தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் தரிசனம்
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் ஜனவரி 22 -ம் திகதி ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது.
தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இத்தாலியில் பூர்வீக சொத்து.. கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி.., சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
1 மணிநேரம் கதவுகள் மூடப்படும்
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கதவுகள் தினமும் ஒரு மணிநேரம் மூடபப்டும் என்று கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராமர், 5 வயது குழந்தை ராமராக இருக்கிறார். காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் கண்விழிக்க முடியாது.
இதனால் அவருக்கு ஓய்வு தேவை. இதற்காக தினமும் ஒரு மணி நேரம் கோயிலின் கதவுகளை மூடிவைக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
அதன்படி, மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை கோவில் கதவுகள் சாத்தப்பட்டு குழந்தை ராமருக்கு ஓய்வு அளிக்கப்படும்'' எனக் கூறியுள்ளார்.
தற்போது, கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில் தரிசன நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் குழந்தை ராமருக்கு பூஜைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |