நிறைவேறிய பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு... நிபுணர்கள் கூறும் பின்னணி
பல்கேரியா நாட்டவரான பாபா வங்காவின் திகிலை ஏற்படுத்தும் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
5079ம் ஆண்டு வரையான கணிப்புகள்
பாபா வங்கா 1996ல் மரணமடைந்திருந்தாலும், 5079ம் ஆண்டு வரையான கணிப்புகளை பதிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. 2024ல் ரஷ்ய ஜனாதிபதி மீதான கொலை முயற்சி, இணையமூடாக தாக்குதல், பொருளாதார நெருக்கடி மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் இயற்கை சீற்றங்கள் என பாபா வங்கா பட்டியலிட்டுள்ளார்.
@getty
ஆனால் 2023ல் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ள சூரிய புயல், தற்போது நிஜமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Sky History என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், சூரிய ஒளி மற்றும் பெருமளவில் கரோனல் வெளியேற்றங்கள் சூரியனின் மேற்பரப்பில் நிகழும்போது சூரியப் புயல் உருவாகிறது.
சூரியப் புயல் ஏற்படும்
சூரியப் புயல் ஏற்பட இருக்கிறது என்பதையும் நிபுணர்கள் சிலர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். டிசம்பர் 1ம் திகதி நண்பகலில் சூரியப் புயலானது பூமியை தாக்கும் என்றே கணிக்கப்பட்டது.
@getty
ஆனால் பாபா வங்கா குறிப்பிட்டிருந்தது போன்று, பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றே நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், 2023ல் சூரியப் புயல் ஏற்படும் என பாபா வங்கா கணித்திருந்தது நிஜமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |