அணுசக்தி பேரழிவு... வல்லரசு நாட்டின் உயிரியல் ஆயுதம்: பாபா வங்காவின் கணிப்பில் ரஷ்யாவா?
நடப்பு ஆண்டில் வல்லரசு நாடு ஒன்று பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தும் என்பது தொடர்பில் பாபா வங்கா அப்பட்டமான கணிப்பு ஒன்றை பதிவு செய்துள்ளது ரஷ்யாவின் தற்போதை நகர்வுகளை ஒத்திருப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
திகிலூட்டும் எச்சரிக்கை
1996ல் பாபா வங்கா மரணமடைந்திருந்தாலும் அவரது கணிப்புகள் பல தற்போதும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2023ம் ஆண்டு பற்றிய திகிலூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
@google
மிக மோசமான தகவலாக, இந்த ஆண்டு அணுசக்தி பேரழிவு ஓன்று நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் கணித்துள்ளார். அதாவது ஆசியா முழுவதும் நச்சு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் அணுமின் நிலையப் பேரழிவு ஓன்று ஆபத்தான நோய் பரவுவதற்கு வழிவகுக்கும் என வங்கா கணித்துள்ளார்.
அத்துடன் 2023ல் வல்லரசு நாடு ஒன்று உயிரியல் ஆயுதத்தை பயன்படுத்தும் எனவும் அது பல நூறாயிரம் மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் கணித்துள்ளார்.
@getty
கணிப்பு நிஜமாகலாம் என்ற அச்சம்
தற்போதைய ரஷ்ய - உக்ரைன் போர் உச்சமடைந்திருக்கும் நிலையில், அதில் வல்லரசு நாடுகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கும் சூழலில் பாபா வங்காவின் கணிப்பு நிஜமாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
@getty
அணை சேதப்படுத்துதல் அம்மோனியா குழாய்களை தகர்ப்பது என உக்ரைனில் ரஷ்யா பேரழிவுக்கு காரணமாகி வருகிறது. இந்த நிலையில், அணு ஆயுதம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் சமீப நாட்களில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பாபா வங்காவின் கணிப்பை உறுதி செய்வதாகவே உள்ளது என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |