மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்க வேண்டிய இந்தியா பாகிஸ்தான் மோதலை உரிய நேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் தலையிட்டு
அண்டை நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதால், மிக மோசமான விளவுகள் ஏற்பட்டிருக்கும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது நிர்வாகம் உரிய நேரத்தில் தலையிட்டு, உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இரு நாடுகளும் சக்திவாய்ந்த மற்றும் அசைக்க முடியாதவை என்பதையும் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.
தமது நிர்வாகம் உரிய நேரத்தில் தலையிடாமல் இருந்தால், மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும் என்றும், மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் கடுமையாக உழைத்த துணை ஜனாதிபதி வான்ஸ் மற்றும் செயலாளர் ரூபியோ ஆகியோரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தத்தில் ஏற்பட காரணம் தாம் முன்வைத்துள்ள வர்த்தகம் தொடர்பான ஆலோசனையே என்றும் ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார். இதனாலையே, இரு நாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் வர்த்தகம் தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைகளும் அமெரிக்காவுடன் நடக்கவில்லை என்றே இந்திய அரசாங்க வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்
இந்தியா - பாகிஸ்தான் மோதம் மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடியாக, இந்தியாவை எவரும் அணு ஆயுதத்தால் மிரட்ட முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் என்பது வெறும் ஒரு சாதாரண இராணுவ நடவடிக்கை அல்ல என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் கொள்கையில் ஒரு கோட்பாட்டு மாற்றம் என்றார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ளது நிரந்தரமான போர் நிறுத்தம் என ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது போர் நிறுத்தத்திற்கு முதன்மையான காரணம் தாம் என ட்ரம்ப் அறிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |