அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தேசிய பறவையானது வழுக்கை கழுகு! ஜோ பைடன் ஒப்புதல்
அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பறவை
அமெரிக்காவின் தேசிய பறவையாக வழுக்கை கழுகு பல ஆண்டுகளாக அதிகாரமற்ற முறையில் அங்கீகரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் தேசியப் பறவையாக வழுக்கை கழுகு எனப்படும் வெண்தலைக் கழுகு(Bald Eagle) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பறவை தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டதை அடுத்து சட்டமாக அதிகாரப்பூர்வமடைந்துள்ளது.
The bald eagle, a symbol of the power and strength of the United States for more than 240 years, earned an overdue honor on Tuesday: It officially became the country's national bird. https://t.co/jXxXDy08JM pic.twitter.com/Xm1dn37FYS
— ABC News (@ABC) December 25, 2024
அமெரிக்காவின் வலிமையான அடையாளமாக வழுக்கை கழுகு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
1782 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பெரும் முத்திரையில் இந்த வழுக்கை கழுகு இடம்பெற்றுள்ளது.
தேசியப் படத்தில் இதன் முக்கியத்துவம் இருந்தபோதிலும், தேசியப் பறவை என்ற அதிகாரப்பூர்வ அந்தஸ்து இதுவரை இல்லாமல் இருந்தது.
எதிர்ப்பும், பெருமிதமும்
தேசிய கழுகு திட்டத்தின் துணைத் தலைவர் ஜாக் டேவிஸ்(Jack Davis) தெரிவித்துள்ள கருத்தில், சுமார் 250 ஆண்டுகளாக, தேசிய பறவையாக இல்லாத போதிலும், கழுக்கை தேசியப் பறவை என்று நாங்கள் அழைத்தோம், "ஆனால் இப்போது இந்த தலைப்பு அதிகாரப்பூர்வமானது, மேலும் எந்த பறவையும் இதை விட தகுதியானது அல்ல." என குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னெடுப்பு பரவலான பாராட்டைப் பெற்று வந்தாலும், அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறும் பாதையில் இதற்கு சில தடைகள் இருந்தன.
அவற்றில் குறிப்பாக, நிறுவனத் தந்தை பெஞ்சமின் பிராங்க்ளின்(Founding Father Benjamin Franklin), இந்தப் பறவை "கெட்ட ஒழுக்க நெறியை கொண்டது" என்று கூறி எதிர்ப்பை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. வலிமை, துணிச்சல், சுதந்திரம் மற்றும் அழியாமை ஆகியவற்றின் அடையாளமாக, அமெரிக்க கலாச்சாரத்தில் பூர்வக இருப்புடைய வழுக்கை கழுகு(Bald eagles) ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |