வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ராட்சத பலூன்: சீனாவின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய அமெரிக்கா
அமெரிக்காவில் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீனாவின் ராட்சத பலூன், சீனாவின் உளவு துறை திட்டத்தின் ஒரு பகுதி என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த சீன பலூன்
கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா கடற்கரையில் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட சீனாவின் ராட்சத பலூன் அமெரிக்க போர் விமானம் எஃப்-22 ராப்டரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சீனாவின் இந்த ராட்ஷச பலூனை உளவு பலூன் என்று அமெரிக்க குற்றம் சாட்டி வரும் நிலையில், அது உள்ளூர் ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட வானிலை ஆராய்ச்சி பலூன் என தெரிவித்தது.
China ballon shot down near Myrtle Beach. pic.twitter.com/3JszXauHBV
— Renaissance Modern Media (@RenaissanceMM1) February 5, 2023
அத்துடன் அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச விதிகளை மீறியது என்று சீனா கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையில் சீன உளவு பலூனின் எச்சங்களை திருப்பி தர முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
சீன உளவுத் துறையின் திட்டம்
இந்நிலையில் தி நியூயார்க் டைம்ஸ், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவரை சுட்டிக் காட்டி, அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனில் மின்னணு உளவுத்துறை கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தது.
The #Chinese balloon shot down by the #US military was equipped with electronic intelligence equipment and was part of the Chinese intelligence program, covering more than 40 countries on five continents.
— NEXTA (@nexta_tv) February 9, 2023
? The New York Times, citing a State Department spokesman.
1/2 pic.twitter.com/KK80qbrhFt
அத்துடன் ஐந்து கண்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய சீன உளவுத் துறை திட்டத்தின் ஒற்றை பகுதி இது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பலூனில் ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன, அவை மூலம் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை சீனாவால் பெறமுடியும்.
பலூனை வடிவமைத்த சீன உற்பத்தியாளர்கள் சீன ஆயுதப்படை உடன் தொடர்புடையவர்கள் என்றும் அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர் என தகவல் வெளியிட்டுள்ளது.