பள்ளி வளாகத்தில் மோதிய பயிற்சி விமானம் - 19 பேர் உயிரிழப்பு
வங்கதேசத்தில் பயிற்சி விமானம் , பள்ளிக்கூட வளாகத்தில் மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
பள்ளி வளாகத்தில் மோதிய விமானம்
வங்கதேச விமான படைக்கு சொந்தமான F-7 BGI என்ற விமானம், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
மதியம் 1;06 மணியளவில், டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் ஒரு விமானி உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடைக்கால பிரதமர் இரங்கல்
பள்ளி, கல்லூரிகளில் வகுப்பு நடைபெறும் போது விபத்து ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. விமானம் பள்ளி வளாகம் மீது மோதியதில், வானை நோக்கி பெரிய கரும்புகை எழுந்தது.
மீட்பு படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைப்பதோடு, காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த துயரம் "சரிசெய்ய முடியாதது" என்று கூறி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |