நாடுமுழுவதும் வெடித்த வன்முறை... பதவி விலகினார் பிரதமர்: இந்தியாவுக்குத் தப்பியோட்டம்?
பங்களாதேஷ் நாட்டில் வன்முறை கட்டுப்பாட்டை மீறி, நிலைமை கைமீறிப்போனதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவுக்கு தப்பியோடிய பிரதமர்
பங்களாதேஷ் பிரதமரான ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் இல்லத்துக்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து, அவர் தனது சகோதரியுடன், ஹெலிகொப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Image: Bangladesh Prime Minister's Offi
ஜூலை மாதத்தில் அரசுப் பணியில் குறிப்பிட்ட அளவில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து நாட்டில் போராட்டங்கள் துவங்கின.
போராட்டங்கள் வன்முறையாக மாற, 14 பொலிசார் உட்பட 95 பேர் உயிரிழந்தார்கள். ஏற்கனவே கடந்த மாதம் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 300 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசு அதற்கு பொறுப்பேற்கவேண்டும் என்றும், பிரதமர் பதவி விலகவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கின.
ஆகவே, 15 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்துவந்த ஷேக் ஹசீனா தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பியோடியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Image: AFP via Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |