வட்டி விகிதத்தை குறைத்த கனடா வங்கி - மீண்டும் குறைக்கவும் தயார்
கனடா வங்கி (Bank Of Canada) தனது முக்கிய கொள்கை வட்டி விகிதத்தை 2.5 சதவீதமாக குறைத்துள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த வட்டி விகிதமாகும்.
கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக வட்டி விகிதத்தை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் மாதங்களில் பொருளாதாரத்திற்கு அபாயங்கள் அதிகரித்தால் மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த 25 புள்ளிகள் குறைப்பு, பலவீனமான வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பணவீக்கத்தின் அடிப்படை அழுத்தங்கள் குறித்து குறைவான கவலையை பிரதிபலிப்பதாக கனடா வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் 100,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. Covid-19 காலத்தை தவிர, இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் வேலை இழப்பாகும்.
2025 இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் 1.6 சதவீதம் சுருங்கியுள்ளது. மூன்றாம் காலாண்டிற்கான முன்னறிவிப்பு கூட பலவீனமாக உள்ளது.
"பணவீக்க அபாயங்கள் குறைவாக உள்ள நிலையில் வட்டி விகிதத்தை குறைப்பது பொருளாதார அபாயங்களை சமநிலைப்படுத்த உதவும்" என கனடா வாங்கி ஆளுநர் Tiff Macklem கூறியுள்ளார்.
அடுத்த வட்டி விகித அறிவிப்பு அக்டோபர் 29-ஆம் திகதி நடைபெறவுள்ளது. அந்த அறிவிப்பில் மீண்டும் வட்டி விகிதம் குறைக்கப்படும் வாய்ப்பு 48 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bank of Canada, Bank of Canada cuts Interest rate, Canada Interest rate 2.5 percent