வட்டி மூலம் மட்டும் ரூ.1000 கோடி வருமானம் ஈட்டும் BCCI - IPL மூலம் சம்பாதித்தது எவ்வளவு?
பிசிசிஐ என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் ஒன்றாக உள்ளது.
பிசிசிஐ ஆண்டு வருமானம்
2023-24 நிதியாண்டில், பிசிசிஐ ரூ.9,741.7 கோடி வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
அதில், 59 சதவீதம், அதாவது ரூ.5,761 கோடியை ஐபிஎல் மூலம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், பிசிசிஐ யின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாட்டில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர்களும் விளையாடுவதால், லீக் போட்டிகளில் ஐபிஎல் முதலிடத்தில் உள்ளது.
டாடா குழுமம் 2024-28 வரை ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக ரூ.2,500 கோடி ஒப்பந்தத்தில் இணைந்தது. 2023-27 ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் 48,390 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.
தொலைக்காட்சி உரிமைகளை 23,575 கோடி ரூபாய்க்கு டிஸ்னி ஸ்டாரும், டிஜிட்டல் உரிமைகளை 23,758 கோடி ரூபாய்க்கு வயாகாம்18-ன் ஜியோசினிமாவும் வாங்கியது.
இதைதவிர்த்து, வங்கி வைப்பு மற்றும் முதலீடுகளில் இருந்து வட்டியாக மட்டும் ரூ.987 கோடி பெறுகிறது.
ஐபிஎல் அல்லாத ஊடக உரிமைகள் மூலம் ரூ.361 கோடி சம்பாதித்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக் (WPL ) மூலம் ரூ.378 கோடி ரூவருமானம் பெற்றுள்ளது.
ஐசிசியின் வருடாந்திர வருவாயில் 38.5% (ஆண்டுக்கு ரூ.19,88 கோடி ) பிசிசிஐ-க்கு வழங்கப்படுகிறது. இது மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பெரும் தொகையை விட மிக அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |