கவனமாக இருங்கள்... வாக்னர் கூலிப்படை தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை
ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையின் தலைவருக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
அந்த திட்டத்திற்கு கோடரி
கடந்த மாதம் வாக்னர் கூலிப்படையால் ரஷ்யாவில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதக் கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில், அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
@getty
ஆனால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அந்த திட்டத்திற்கு கோடரி வைத்ததுடன், 8,000 வாக்னர் கூலிப்படை வீரர்கள் வெளியேறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எவ்ஜெனி பிரிகோஜின் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகாமல் போக, அவர் ரகசிய சிறையில் தள்ளப்பட்டிருக்கலாம் எனவும், கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
நான் கவனமாக இருப்பேன்
இருப்பினும், எவ்ஜெனி பிரிகோஜின் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்ளும் நிலையில், வாக்னர் கூலிப்படை தலைவர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
@getty
அதில், கடவுளுக்கு மட்டுமே தெரியும், எவ்ஜெனி பிரிகோஜின் தற்போது எங்கிருக்கிறார் என்பது. அவரது நிலையில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக எனக்கு அளிக்கப்படும் உணவு முதற்கொண்டு நான் கவனமாக இருப்பேன் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |