அழகிப்போட்டியில் வெற்றி பெற்றால் கனேடிய குடிமகனுடன் திருமணம்! பரபரப்பை ஏற்படுத்திய விளம்பரம்
அக்டோபர் 23ஆம் திகதி ஹொட்டலில் அழகிப்போட்டி நடைபெற உள்ளதாக பஞ்சாபில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹொட்டலின் உரிமையாளர் போட்டிக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்
இந்திய மாநிலம் பஞ்சாப்பில் ஒட்டப்பட்ட அழகிப்போட்டி குறித்த விளம்பர சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிந்தா நகரில் ஹொட்டல் ஒன்றில் அழகிப் போட்டி நடைபெற உள்ளதாக சுவரோட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் பொது பிரிவு பெண்களுக்கான அழகிப்போட்டி என்றும், இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பெண் கனேடிய குடியுரிமை கொண்ட நபரை திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நகரின் பல பொது இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பலரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த எண்கள் Switch off செய்யப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து குறித்த விளம்பரத்தை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து போட்டி அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரை அணுகினர்.
பின்னர் சுரிந்தர் சிங், ராம் தயாள் சிங் ஜவ்ரா ஆகிய இருவரை இதுதொடர்பாக பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் மீது அவதூறாக அறியப்படும் விடயத்தை அச்சிடுதல், ஏமாற்றுதல், ஒரு பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.