ஆப்கான் பெண்களுக்கு இதற்கும் தடையா..! தாலிபன் அரசு அதிரடி உத்தரவு
ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை மூட தாலிபன் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதீத கட்டுப்பாடுகள்
தாலிபன்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகிறது. அந்த வகையில் அழகு நிலையங்களை மூட ஒரு மாத காலம் கெடு அளித்திருந்தது.
இதற்கு காரணம், பெண்கள் தங்கள் கண்புருவங்களை திருத்தி அழகுபடுத்திக் கொள்வதும், முடியின் அடர்த்தியை அதிகரித்துக் கொள்ள வேறொருவரது முடியை இணைத்துக் கொள்வதும் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானவை என்று தாலிபன்கள் கூறுகின்றனர்.
AFP
அழகு நிலையங்கள் மூடல்
அவர்கள் இறைவழிபாட்டிற்கு பெண்களின் இந்த அழகுபடுத்திக்க கொள்ளுதல் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தான் ஒரு மாத காலம் கெடு முடிந்ததால் அழகு நிலையங்களை மூட வேண்டும் என தாலிபன் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பெண்கள் மட்டும் தான் அழகு நிலையங்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Atif Aryan / AFP
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |