சொந்த நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாட்டில் பிச்சையெடுத்த நூற்றுக்கணக்கானோர் நாடு கடத்தல்! புகைப்படங்கள்
நாடு விட்டு நாடு வந்து பிச்சை எடுத்த பலர் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி நைஜீரியாவை சேர்ந்த 562 பேர் கானா நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக கானாவில் தங்கியிருந்த நிலையில் பலரும் Accra நகரில் பிச்சை எடுத்து வந்தனர்.
இதையடுத்து விமானம் மூலம் அவர்கள் நேற்று சொந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும் பலர் சட்டவிரோதமாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த விமானங்களில் அழைத்து செல்லப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, Accraவில் உள்ள நைஜீரிய தூதரகம், கானா அரசாங்கத்துடன் இணைந்து இந்த திட்டத்தை தொடங்குவதாக கூறியது.
திருப்பி அனுப்பப்படும் அனைத்து நபர்களும் நைஜீரிய அரசாங்கத்தால் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் மற்றும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.