பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்போது ஒரு நிறுவனத்திற்கு முதலாளியாக மாறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னாவில் வசித்து வரும் ஜோதி என்ற சிறுமி தனது சிறு வயதில் இருந்தே ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் அவரோடு ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண் ஒருவர் தாய் இடத்தில் இருந்து ஜோதியை வளர்த்து வந்தார்.
இதற்கிடையில் அவரை வளர்த்து வந்த பெண் ஒரு நாள் மரணித்து போக ஜோதி மீண்டும் யாரும் இல்லாத சூழ்நிலையில் தள்ளப்பட்டார். அப்போது நடந்த நிகழ்வு ஒன்று அவரது வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது பாட்னாவை சேர்ந்த ராம்பே பவுண்டேஷன் என்ற பிரபல நிறுவனம் ஒன்று ஜோதியை தத்தெடுத்து படிக்க வைத்தது. ஜோதி தனது படிப்பை முடித்த நிலையில் உபேந்திரா மராத்தி இன்ஸ்டியூட்டில் மதுபானி என்ற பெயிண்டிங் கலையையும் கற்றுக்கொண்டார்.
பின்னர் ஜோதிக்கு தொழில் செய்ய ஆர்வம் ஏற்பட்டதால் தனி பெண்ணாக ஒரு கஃபேடெரியாவை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதேவேளையில் நேரம் கிடைக்கும் போது தனது படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இவரது வாழ்க்கை தற்போது பலருக்கு பாடமாக அமைந்துள்ளது.
அதோடு 19 வயதில் தனி பெண்ணாக இருந்து கடை மற்றும் படிப்பு இரண்டையும் சரியாக பேலன்ஸ் செய்து வருவது பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.