பெய்ரூட் மீது முதல் ராக்கெட் தாக்குதல்: நவம்பர் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இஸ்ரேல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பெய்ரூட்டின் மீது இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்
நவம்பர் மாத போர் நிறுத்தத்தை மீறி, பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய இராணுவ எச்சரிக்கையைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல்களை பெரும்பாலும் குறைத்த நவம்பர் மாத போர் நிறுத்தத்தால் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் அமைதியான நிலையை இந்த தாக்குதல் உடைத்துள்ளது.
AFPTV படக்காட்சிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து புகை மண்டலங்கள் எழுவதைக் காட்டுகின்றன.
More scenes documenting the horrific Israeli airstrikes on Beirut, which caused the collapse of at least one building, marking the most serious violation of the ceasefire agreement with Lebanon. pic.twitter.com/jgFGa5G99k
— Quds News Network (@QudsNen) March 28, 2025
தேசிய செய்தி நிறுவனம், "பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹடாத் மாவட்டத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின," என்று விவரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |