ஏன் சோர்வாக இருக்கிறீர்கள் புடின்? அண்டை நாட்டின் ஜனாதிபதி கேட்ட கேள்வி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்தபோது, அவர் சோர்வாக இருப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி கூறினார்.
பெலாரஸ் ஜனாதிபதி வருகை
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுப்பதற்கான ஏவுதளமாக பெலாரஸ் பிரதேசத்தைப் பயன்படுத்த புடினை அந்நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ அனுமதித்தார்.
அதனைத் தொடர்ந்து, தங்கள் அண்டை நாடான பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.
சோர்வாக இருந்த புடின்
இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினுக்கு லுகாஷென்கோ வருகை புரிந்துள்ளார். அப்போது புடினை அவர் சந்தித்தபோது நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? சோர்வாக தெரிகிறது என்று கேட்டார்.
இரு நாட்டு தலைவர்களும் அரவணைப்பை பகிர்ந்து கொண்டனர். ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அவர் வந்திருந்தார்.
புடினின் பதில்
புடின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பிய கருத்துக்களில் லுகாஷென்கோவிடம் கூறுகையில், 'அனைத்து பகுதிகளிலும் எங்கள் கூட்டுப் பணியின் விளைவாக நாங்கள் நிறைய செய்துள்ளோம் என்று நான் சொல்ல வேண்டும். இவை அனைத்தையும் நாளை விவாதிப்போம் - இது சர்வதேச அரங்கில் நமது ஒத்துழைப்பிற்கும், நமது மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கேள்விகளை கூட்டமாகத் தீர்ப்பதற்கும் பொருந்தும்' என தெரிவித்தார்.
@EPA