கண்ணாடி கூண்டினால் ஆன மாஸ்க்! 61 வயது முதியவர் செய்த ஆச்சரிய செயல்
பெல்ஜியத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் அணிந்திருக்கும் வித்தியாசமான மாஸ்க் அனைவராலும் கவரப்பட்டு வருகின்றது.
பெல்ஜியம் கலைஞர் ஆலியன் வெர்சூரன் (61 வயது) இவர் ஒரு சமூக ஆர்வலராவார். இவர் புருசல்ஸ் வீதிகளில் செல்லும் போது கண்ணாடி கூண்டினால் ஆன ஒரு மாஸ்க்கை அணிந்து சென்றுள்ளார்.
இது பார்ப்பதற்கு உள்ளே நறுமணமிக்க செடிகளுடன் பச்சை பசேல் என காட்சியளித்துள்ளதால் இது பார்வையாளர்களை தன்பக்கம் திரும்பி பார்க்க செய்துள்ளது.
ஆலியன் அணிந்திருக்கும் இந்த புது வகை மாஸ்க் கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதோடு தூய்மையான காற்றை கொடுப்பதாக சொல்லப்படுகின்றது.
துனிசியாவில் பணியாற்றிய போது பசுமையான சோலைகளால் கவரப்பட்ட அவர் தற்போது இது போன்ற மாஸ்கை வடிவமைத்தாகவும் இந்த ஐடியாவை 15 ஆண்டுகளுக்கு முன்னரே யோசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அவரது மூச்சுக் காற்று அதில் உள்ள நறுமண செடிகளால் சுத்திகரிக்கப்பட்டு தூய்மையான காற்று கிடைப்பதாகவும் ஆஸ்துமா நோயாளியான அவர் முகக்கவசம் அணிவதால் அசௌகரியம் ஏற்பட்டு இந்த கண்ணாடி மாஸ்க்கிற்கு மாறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.