கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்! வெளியான வீடியோ
நெதர்லாந்தில் F-16 போர் விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் வடக்கில் உள்ள Leeuwarden விமான தளத்திலே இந்த விபத்து நடந்துள்ளது. நெதர்லாந்து விமானப்படையின் இரண்டு F-16 போர் விமானம் தளங்களில் Leeuwarden ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், பெல்ஜிய F-16 போர் விமானம் நெதர்லா்நதில் உள்ள Leeuwarden விமான தளத்தில் உள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து வியாழக்கிழமை காலை நடந்தது, இதில் 2 பேர் காயமடைந்தனர், விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானி அதிலிருந்து வெளியேறிவிட்டார்.
??? #Belgique #Netherlands #F16
— La Poutre d'Istanbul (@martopirlo1) July 1, 2021
Un F-16 des @BeAirForce a eu un soucis au démarrage sur la base aérienne de Leeuwarden aux Pays-Bas et le pilote a du s'éjecter. L'avion a fini sa course dans un bâtiment de la base faisant 2 blessés
Video ⤵️ pic.twitter.com/z5aHaxcTf8
சம்பவியிடத்தில் வெடி விபத்து அல்லது தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.