இஸ்ரோ விஞ்ஞானியைத் தாக்கிய ஸ்கூட்டர் ரைடர்; சாலையில் கார் மீது மோதிய சம்பவம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானி ஒருவர், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வேலைக்குச் சென்றபோது, ஒரு அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரோ அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் தனது ஆட்டோமொபைல் முன் வேகமாக கட் செய்ததாக, இஸ்ரோ விஞ்ஞானி ஆஷிஷ் லம்பா 'X' தளத்தில் வெளியிட்ட பதிவில் சம்பவத்தை வீடியோ ஆதாரத்துடன் விவரித்துள்ளார்.
தனது காருக்கு முன் வேகா மாக கேட் செய்த அந்த ஸ்கூட்டர் மீது மோதலைத் தடுக்க, ஆஷிஷ் எதிர்பாராதவிதமாக தனது பிரேக்கைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்போது அந்த ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றவர் அவரது காரின் முன் நிறுத்தி, வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்தார்.
Aashish Lamba/X
ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரில் உள்ள பழைய விமான நிலைய சாலையில் புதிதாக கட்டப்பட்ட எச்ஏஎல் சுரங்கப்பாதைக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆஷிஷ், காரின் டேஷ்போர்டு கேமரா மூலம் பெறப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இரண்டையும் பகிர்ந்து கொண்டார்.
ஸ்கூட்டரின் பதிவு எண்ணையும் (KA03KM8826) பகிர்ந்த ஆஷிஷ், மற்றொரு பதிவில், அந்த நபர் தனது காரை இரண்டு முறை உதைத்துவிட்டு அங்கிருந்து பறந்துவிட்டதாகவும், தயவுசெய்து இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை செய்யுங்கள் என, பெங்களூரு நகர காவல்துறை, பெங்களூரு நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் பெங்களூரு பொலிஸ் கமிஷனர் ஆகியோருக்கு டேக் செய்து வேண்டுகோளை முன்வைத்தார்.
@blrcitytraffic @CPBlr @BlrCityPolice Yesterday during going to ISRO office,Near to newly constructed HAL underpass, a person on scooty (KA03KM8826) without helmet was driving recklessly and coming in front of our car suddenly and so We had to apply sudden brake. pic.twitter.com/xwDyEy2peA
— Aashish Lamba (@lambashish) August 30, 2023
பெங்களூரு காவல்துறை விரைவாக பதிலளித்தது, ஆஷிஷிடம் தொடர்பு கொண்டு வைவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி என ஆஷிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டார்.
சந்திரயான்-3 நிலவு திட்டத்திற்கான லேண்டர் தொகுதியை உருவாக்கியதாக கூறி, மிதுல் திரிவேதி எனும் நபர் இஸ்ரோ விஞ்ஞானி போல் ஆள்மாறாட்டம் செய்து, ஊடக நேர்காணல்களை வழங்கியதாக ஒரு தனியார் பயிற்றுவிப்பாளர் சூரத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
ISRO Scientist, Bengaluru:, Scooter Rider Assaults ISRO Scientist, Indian Space Research Organisation, ISRO, Aashish Lamba