மேடை நிகழ்ச்சியில் பாடகியை கூட்டத்திலிருந்து துப்பாக்கியால் சுட்ட இளைஞர்! பரபரப்பு சம்பவம்
இந்திய மாநிலம் பீகாரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில், போஜ்புரி பாடகி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகி நிஷா உபாத்யாய்
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் கவுர் பசந்தை சேர்ந்தவர் நிஷா உபாத் யாய். பிரபல போஜ்புரி பாடகியான இவர் பாட்னாவில் வசித்து வருகிறார்.
பல்வேறு கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வந்த நிஷா, செந்துவார் கிராமத்தில் உபநயன் விழாவில் பாடுவதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளார்.
அவர் மேடையில் பாடிக்கொண்டிருப்பதுபோது திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது. நிஷாவின் இடதுதொடையில் குண்டு பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
தோட்டா அகற்றம்
இதனையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று, தொடையில் இருந்த தோட்டா அகற்றப்பட்டது.
பாடகி நிஷா நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், பொலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்திருத்தம்
பீகார் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடப்பது தொடர்கதையானதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் கொண்டு வந்து சுடுவது கிரிமினல் குற்றம் என்றும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.