ட்ரம்ப் ஆட்சி தொடங்குவதற்கு முன் ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க பைடன் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவின் பொருளாதாரத்தை நோக்கி புதிய தடைகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இது, ஜனவரி 20-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்கும் முன் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு உதவி
இதனிடையே, பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு $500 மில்லியன் மதிப்பிலான புதிய ராணுவ உதவிகளை அறிவித்துள்ளது.
இதில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் F-16 யுத்த விமானங்களுக்கான உதிரி பாகங்கள் அடங்கும்.
ரஷ்யா மீது தடைகள்
புதிய தடைகள் ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் மற்றும் போரை நிதியளிக்க உதவும் நிறுவனங்களை குறிவைக்கும்.
இதில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் மற்றும் நிதிநிலையங்கள் ஆகியவை அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் மீண்டும் பதவி ஏற்கும் நிலையில், உக்ரைனுக்கு சிக்கல் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவருடைய ஆலோசகர்கள் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவுக்கு ஒப்புக்கொடுக்க கூடிய சமரசங்களை முன்மொழிந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |