ட்ரம்பின் உலகளாவிய வரிப் போரில் மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொண்டவர்கள்
ஜனாதிபதி ட்ரம்பின் வரிப் போர் உலகளாவிய சந்தையில் அதிர்வலைகளைத் தூண்டியுள்ளதுடன், லண்டன் மற்றும் வால் ஸ்ட்ரீட்டில், கடந்த நான்காண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் மோசமாக
ஜனாதிபதி ட்ரம்பினால் உலக அளவில் எந்த நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளைப் பொறுத்தமட்டில் பார்க்லேஸ் பங்குகள் நேற்று 9 சதவீதம் வரை சரிந்தன.
அமெரிக்காவின் ஜேபி மோர்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவை ஸ்தம்பித்தன. HSBC மற்றும் Standard Chartered போன்ற வங்கிகள் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டன.
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், அமேசான், என்விடியா மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் சரிந்தன. இந்த மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் டிரில்லியன் டொலர் சந்தை மதிப்புகளைக் கொண்டுள்ளனர், எனவே அதிக பங்கு வீழ்ச்சி என்பது நூற்றுக்கணக்கான பிரில்லியன் டொலர்களை இழக்க வைத்துள்ளது.
ஆசிய நாடுகள்
ஆப்பிள் நிறுவனம் வியாழன் அன்று 300 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது. நைக், அடிடாஸ், பூமா மற்றும் ஜேடி ஸ்போர்ட்ஸ் ஆகியவை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
நைக் மட்டும் வியாழனன்று 12 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது. மேலும், வியட்நாம், சீனா மற்றும் தாய்லாந்தில் தங்கள் பொருட்களை பெருமளவில் தயாரிப்பதால் இந்த நிறுவனங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மட்டுமின்றி இந்த ஆசிய நாடுகள் ட்ரம்பின் மிக மோசமான வரி விதிப்புக்கு இலக்காகியுள்ளனர். நான்காவது மாதமாக புதிய வேன்களின் விற்பனை குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் புதிய முன்பதிவுகள் 3.2 சதவீதம் குறைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |