நான்கு பிள்ளைகள் பலி: ஒரே ஊரில் இரண்டு துயரச் செய்திகள்
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நான்கு பிள்ளைகள் பலியாகியுள்ளார்கள்.
காருக்குள் கண்டெடுக்கப்பட்ட பிள்ளைகள்
பீஹார் தலைநகர் பாட்னாவில், நேற்று மாலை கார் ஒன்றிற்குள் இரண்டு பிள்ளைகள் பேச்சுமூச்சில்லாமல் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, ஒரு வீட்டில் நின்ற காருக்குள் 9 வயது சிறுமி ஒருத்தியும் 5 வயது சிறுவன் ஒருவனும் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
அவர்கள் இருவரையும் பரிசோதித்தபோது ஒரு பிள்ளைக்கு உயிர் இருந்ததாகக் கூறிய பொலிசார், ஆனால், பின்னர் மருத்துவர்களால் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றமுடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்கள்.
அந்தக் காரின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வீடொன்றிற்குள் இறந்துகிடந்த பிள்ளைகள்
அதே பீஹாரிலுள்ள Janipur என்னுமிடத்தில், ஜூலை மாதம் 31ஆம் திகதி, வீடொன்றிற்குள் 15 வயதுள்ள ஒரு சிறுமியும் 10 வயதுள்ள ஒரு சிறுவனும், உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
பொலிசார் அந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், உயிரிழந்த பிள்ளைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |