பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட 45 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! வெளியான அதிர்ச்சி தகவல்
இந்திய மாநிலம் பீகார் பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 45 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதிய உணவை சாப்பிட்ட 45 மாணவர்கள் வாந்தி, மயக்கம்
பீகார் மாநிலம், சுபாலில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 45 மாணவர்களுக்கு திடீரென மயக்கம், வாந்தி வந்தது.
இதனையடுத்து, அப்பள்ளி மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள நர்பட்கஞ்ச் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளி மாணவர்களில் 5 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பொலிஸார் விசாரணை
பொலிஸார் நடத்திய விசாரணையில், பள்ளி மாணவர்கள் கூறுகையில், காய்கறியில் பச்சோந்தி இருந்ததாகவும், இதனால்தான் மதிய உணவை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொலிஸார் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட 45 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.