100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.75 கோடி ஊழல்.., பாஜக அமைச்சர் மகன் கைது
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.75 கோடி ஊழல் நடந்த வழக்கில் பாஜக அமைச்சர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் மகன் கைது
இந்திய மாநிலமான குஜராத், பாஜக அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத். இவர் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.75 கோடி ஊழல் நடந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான பொருட்களை அனுப்பப்படாமல் இருக்கும் நிலையில் அதனை அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கூறி பல்வந்த் சிங் கபாத் மீது புகார் பெறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அமைச்சரின் மகன் நிறுவனமானது 100 நாட்கள் திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை எடுக்காமலே அவரது நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில், கைது செய்யப்பட்ட பல்வந்த் சிங் கபாத்த்தின் தந்தை பச்சு கபாத், குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |