இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய இவரால் தான் முடியும் என்பது சீமானுக்கு தெரியும்.! அண்ணாமலை பளிச்
இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது.
அதிமுக குறித்து எங்களது கட்சியினர் தலைமையின் உத்தரவு இல்லாமல் எந்த கருத்தையும் பேசக்கூடாது என கூறியுள்ளோம்.
அதிமுகவுடன் எங்களுக்கு சண்டை சச்சரவு கிடையாது. இலங்கை மக்களுக்கு நல்லது செய்ய மோடியால் மட்டும்தான் முடியும் என்பது சீமானுக்கும் தெரியும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் சீமான், எங்களது பக்கம் சாய்ந்து தனது கோரிக்கையை நிறைவேற்ற முயற்சித்தால் கூட சரியான முடிவாகவே இருக்கும் என கூறியுள்ளார்.