இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள்! சீமான் பேச்சுக்கு பாஜக ஆதரவு
ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது சீமான் பேசியதை கண்டிப்பது நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும் என சீமானுக்கு ஆதரவாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பேசியுள்ளார்.
சீமான் சர்ச்சை பேச்சு
இந்திய மாநிலம் மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு எதிராக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் ஜூலை 30 ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசும்போது,"மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசினால் இங்குள்ள கிறிஸ்துவர்கள் ஒட்டு போடுவதில்லை. இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேவாலயத்திற்கு சென்றுவிட்டு தேவனே வாரீர், வாரீர்ன்னு பாடிவிட்டு நாட்டை யாரிடமோ கொடுத்து விட்டார்கள்" என பேசியிருந்தார்.
ஜவாஹிருல்லா கண்டனம்
சீமான் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பதிவில்,"சீமானின் கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது.
தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்" எனக் கூறியிருந்தார்.
கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும்
— Jawahirullah MH (@jawahirullah_MH) August 1, 2023
மனிதநேய மக்கள்
கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ச.ம.உ வெளியிடும் அறிக்கை
மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின்…
சீமானுக்கு பாஜக ஆதரவு
இந்நிலையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில்,"இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது. ஏன் தமிழ்நாட்டை குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்? என்று தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை சாத்தானுடைய அரங்கு என்றும் ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்?
தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா? ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்" என்று கூறியுள்ளார்.
"கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்." - @jawahirullah_MH
— Narayanan Thirupathy (@narayanantbjp) August 2, 2023
“இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய…
அதாவது, ஆர்எஸ்எஸ்ஸிற்கு ஆதரவாக சீமான் செயல்படுகிறார் என்று கூறி வரும் நிலையில் நாராயணன் திருப்பதி சீமானுக்கு ஆதரவாக பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |