உலகின் மிக நீளமான மூக்கை பெற்றவர் குறித்து வெளியான துயர சம்பவம்
உலகின் மிக நீளமான மூக்க்குக்கு சொந்தக்காரரான துருக்கியை சேர்ந்த நபர் பரிதாபமாக மரணமடைந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக நீளமான மூக்குடையவர்
துருக்கியை சேர்ந்த 75 வயது Mehmet Özyürek என்பவரே உயிருடன் இருக்கும் நபர்களில் மிக நீளமான மூக்குடையவர் என மூன்று முறை விருது பெற்றார்.
@getty
கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் Mehmet Özyürek மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
துருக்கியின் ஆர்ட்வின் நகரில் அவருக்கு நல்லடக்கம் செய்ய இருப்பதாகவும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தரப்பு தெரிவித்துள்ளது. இதுவரை அவருக்கு ஆதரவும் அன்பும் செலுத்தி வந்த ஆர்ட்வின் நகர மக்களுக்கு அவரது மகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது ஒரு பரம்பரை பழக்கம்
மட்டுமின்றி, தாங்கள் துயரத்தில் இருப்பதாகவும், தமது தந்தை மிகவும் இரக்க குணம் கொண்டவர் எனவும், அவரது உள்ளத்தில் அமைதி இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மிக லேசான வாசனையை கூட Mehmet Özyürek அடையாளம் கண்டுவிடுவார் எனவும்,
@getty
ஆனால் சாதாரண மக்களால் அந்த வாசனையை அனுபவிக்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான் புரிந்து கொண்டவரை இது ஒரு பரம்பரை பழக்கம் எனவும், தமது தந்தை உட்பட சிலருக்கு இந்த வாசனையை அடையாளம் காணும் திறன் இருந்தது எனவும் Mehmet Özyürek குறிப்பிட்டிருந்தார்.