2 டோஸ் தடுப்பூசி போட்டாலும் இவர்களை கொரோனாவிடமிருந்து காப்பாற்ற முடியாது! வெளிச்சத்திற்கு வந்த உண்மை
இரத்த புற்றுநோய் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகளிடமிருந்து முழு பாதுகாப்பு கிடைக்காது என்று அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை என்று தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் கொரோனா தடுப்பூசியால் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை என்று தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுமார் 1,000 பேரிடம் ஆன்லைனில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளால் தடுப்பூசி நோயெதிர்ப்பு சக்தியைக் உருவாக்கும் வாய்ப்பு குறைவு என்று 80 சதவித பேரிடம் NHS கூறவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருந்தாலும் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாகவும், மேலும் கடுமையான நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.