ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துவைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் தகவல்
கடந்த சனிக்கிழமை, இஸ்ரேல் நாட்டின் மீது, காசாவிலிருந்து ஹமாஸ் ஆயுதக்குழு திடீர் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதுடன், பலரை பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றது அந்தக் குழு.
பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களில், அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டவர்களும் இருப்பதாக தகவல் வெளியானது.
13 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதாக அறிவித்த ஹமாஸ்
இந்நிலையில், இஸ்ரேல், காசா மீது நடத்திய தாக்குதலில், பிணைக்கைதிகள் 13 பேர் கொல்லப்பட்டதாக நேற்று ஹமாஸ் தெரிவித்திருந்தது.
Reuters
அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் என அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்கள் யார், எந்த நாட்டவர்கள் என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
பிணைக்கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் தகவல்
இதற்கிடையில், இதுவரை வெளியிலிருந்தே காசா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், முதன்முறையாக காசாவுக்குள் நுழைந்துள்ளதாக ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் நடத்தும் இந்த சிறிய ரெய்டுகள், ஹமாஸ் ராக்கெட் வீசும் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காகவும், சனிக்கிழமை ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக்கைதிகள் எங்கு அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த தகவல்களை அறிவதற்காகவும் என, Rear Admiral Daniel Hagari என்னும் அந்த தளபதி தெரிவித்துள்ளார்.
AP
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு சுமார் 200 பிணைக்கைதிகளை மறைத்து வைத்திருந்த ஒரு இடத்தைக் கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம், அந்த இடத்துக்குள் நுழைந்ததாகவும், அங்கு பலருடைய உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த உடல்களை ராணுவம் மீட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |