மொத்தமாக கருகிய நிலையில் பெண்ணின் உடல்... மின்னல் வேகத்தில் பரவும் காட்டுத் தீ
ஏதென்ஸ் நகரில் மொத்தமாக தீக்கிரையான தொழிற்சாலை ஒன்றில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஏதென்ஸ் நகரின் வடகிழக்கில்
ஏதென்ஸ் நகரின் வடகிழக்கு புறநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீயினால் ஏற்பட்ட முதல் மரணம் இதுவாகும். Patima Halandriou பகுதியில் அமைந்துள்ள அந்த தொழிற்சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணிற்கு 60 வயதிருக்கலாம் என்றும்,
திங்களன்று அப்பகுதியில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட மக்களின் பாதிக்கு மேல் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கிரேக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏதென்ஸ் நகரின் வடகிழக்கில் சுமார் 22 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Varnavas என்ற நகரில் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் காட்டுத் தீ ஏற்பட்டது.
தற்போது மூன்றாவது நாளாக நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், பலத்த காற்று வீசுவதால் 30 கீ.மீ நீளத்திற்கு காட்டுத் தீ பரவியுள்ளது.
மட்டுமின்றி, 80 அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டெரிகிறது. குறைந்தது ஒரு தீயணைப்பு வீரருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னொருவர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொத்தமாக விழுங்கி வருகிறது
இதனிடையே, சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை முதல் தீ விபத்தில் சிக்கி 66 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஏதென்ஸின் புறநகரில் உள்ள நகரங்கள், கிராமங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருவதாகவும் தெர்ய வந்துள்ளது.
மேலும் தீயானது மின்னல் வேகத்தில் பரவி வருவதாகவும், மரங்கள், குடியிருப்புகள் மற்றும் வாகனங்களை மொத்தமாக விழுங்கி வருகிறது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பொருட்டு 17 விமானங்கள், 15 ஹெலிகொப்டர்கள், லொறிகள் மட்டுமின்றி 670 தீயணைப்பு வீரர்களும் களமிறங்கியுள்ளனர். குறைந்தது 25 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து மக்களை வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |