குளியலறையில் சடலமாக கிடந்த மிஸ்டர் இந்தியா புகழ் உடற்பயிற்சி கலைஞர்
புகழ்பெற்ற 42 வயது உடற்பயிற்சி கலைஞர் பிரேம்ராஜ் அரோரா-க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவரது வீட்டில் உள்ள குளியலறையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த உடற்பயிற்சி நிபுணர்
உலகளவில் அறியப்பட்ட மற்றும் முன்னாள் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற பிரபல உடற்பயிற்சி கலைஞர் பிரேம்ராஜ் அரோரா(Premraj Arora, 42) நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரேம்ராஜ் அரோரா தன்னுடைய கடுமையான தினசரி உடற்பயிற்சியை முடித்து விட்டு அவரது வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.
Instagram/arorapremra
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார், நீண்ட நேரம் ஆகியும் பிரேம்ராஜ் அரோரா வெளியே வராத நிலையில், அவரது வீட்டில் உள்ளவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது பிரேம்ராஜ் அரோரா சரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது வீட்டார்கள், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் பிரேம்ராஜ் அரோரா முன்னரே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
பிரேம்ராஜ் அரோரா-வின் இழப்பு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடற்பயிற்சி குழுவில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Instagram/arorapremra
பட்டங்களை குவித்த பிரேம்ராஜ் அரோரா
பிரேம்ராஜ் அரோரா 2012 மற்றும் 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் சிறந்த பளூ தூக்கும் வீரர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து 2014, 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மிஸ்டர் இந்தியா என்ற பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார். மேலும் நாக்பூர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றும் அசத்தியுள்ளார்.
Instagram/arorapremra