ஈரானிய தளபதி நினைவிடத்தில் கோர சம்பவம்... 100 கடந்த பலி எண்ணிக்கை
அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதில் குறைந்தது 103 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல்
குறித்த தாக்குதலில் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியதாகவும் கூறப்படுகிறது. ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் நான்காவது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையிலேயே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@reuters
இந்த நிலையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கெர்மன் நகர துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். வெளியான காணொளிகளில் சாலை எங்கும் உடல்கள் சிதறிக்கிடப்பதாகவும் ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைவதாகவும் பதிவாகியுள்ளது.
குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவலேதும் வெளியாகவில்லை. மட்டுமின்றி எந்தக் குழுக்களிடமிருந்தும் உடனடியாக உரிமைகோரல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த நபராக சுலைமானி காணப்பட்டார். 2020ல் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் விமானத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
@reuters
சிலரது நிலைமை கவலைக்கிடம்
ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளில் புதன்கிழமை கடும் நெருக்கடியான நிலை காணப்பட்டது. ஈரான் ஆதரவு பலஸ்தீனக் குழுவான ஹமாஸின் துணைத் தலைவர் லெபனானில் இஸ்ரேலிய ட்ரோன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், ஈரானிய மக்களால் மிகவும் கொண்டாடப்படும் தளபதி காசிம் சுலைமானியின் நினைவிடத்தில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
@reuters
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், குண்டுவெடிப்பில் 103 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 141 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர் எனவும், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |