வாக்னர் கூலிப்படைத்தலைவர் பயணித்த விமானத்தில் குண்டு: வெளியாகிவரும் பரபரப்பு தகவல்கள்
ரஷ்யாவைப் பொருத்தவரை, புடினை எதிர்த்தவர்கள் சுதந்திரமாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஒன்றில் அவர்கள் கொல்லப்படுவார்கள், அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இதுவரை, புடினை விமர்சித்த 10 பேர், ஒன்றில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள், அல்லது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள்.
அவ்வகையில், தற்போது வாக்னர் கூலிப்படைத்தலைவரின் மரணத்தின் பின்னணியிலும் புடின் இருக்கக்கூடும் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
Credit: AP
விமான விபத்து
நேற்று ரஷ்யாவில் விபத்துக்குள்ளான விமானம் ஒன்றில் வாக்னர் கூலிப்படைத்தலைவரான Yevgeny Prigozhin (62)ம் அவரது தளபதியான Dmitry Utkin (53)ம் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விழுந்து நொறுங்கிய அந்த விமானத்தில் 10 பேர் இருந்ததாகவும், விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
Credit: East2West
தொடர்ந்து வெளியாகிவரும் வதந்திகள்
அந்த விமான விபத்தில் வாக்னர் கூலிப்படைத்தலைவரான Prigozhin உயிரிழந்ததாக செய்தி வெளியானதுமே, அது தொடர்பில் பல வதந்திகளும் பரவத்துவங்கியுள்ளன.
Prigozhin கொல்லப்பட்டதன் பின்னணியில் புடின் இருப்பதாகவும், அவர் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் சில செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், Prigozhin பயணித்த விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன், அந்த விமானத்தில் விலையுயர்ந்த ஒயின் அடங்கிய பார்சல் ஒன்று ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
Credit: East2West
அந்த பார்சலுக்குள் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என ஒரு செய்தி கூறுகிறது. அதை உறுதி செய்வதுபோல, விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன், இரண்டு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக விமானம் விழுந்து நொறுங்குவதைக் கண்ணால் பார்த்த உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |