வெடிகுண்டு மிரட்டல்! கருணாநிதி.. ஸ்டாலின் வீடுகளில் குவிந்த அதிகாரிகள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் உதவிக்கான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு மற்றும் தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளதாகவும், அவரை கைது செய்ய பொலிசார் விரைந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.