ஜேசிபி வண்டியில் ஏறி போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்! இந்தியாவில் சர்ச்சையை கிளப்பிய சம்பவம்
இந்தியா சென்றுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத்தில் நேற்று JCB எந்திரத்தின் மீது ஏறி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா சென்ற நிலையில், நேற்று குஜாரத் மாநிலத்திற்கு பயணம் செய்தார்.
அப்போது, JCB எந்திர தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்ற போரிஸ் ஜான்சன், அங்கு வேலை பார்த்த ஊழியர்களுடன் சிறிது உரையாடினார். அதுமட்டுமின்றி, அங்கிருந்த JCB வாகனத்தின் மீது ஏறி போஸ் கொடுத்தார். குஜராத்திற்கு சென்றதை காண்பிக்கும் சிறிய காணொளியை பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்திய பிரதமர் மோடி நாட்டை விற்கிறார்! பிரபல நடிகர் கடும் விமர்சனம்
அந்த டீவீட்டில் "பிரித்தானியாவுக்கும் இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கும் இடையிலான நம்பமுடியாத கூட்டாண்மையின் பலனைக் காண இன்று குஜராத்தில் இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று நாங்கள் எங்கள் இரு பெரிய நாடுகளுக்கு இடையே 1 பில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான புதிய முதலீடுகளை உறுதி செய்துள்ளோம், பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 11,000 புதிய வேலைகளை உருவாக்குகிறோம்" என்று பதிவிடப்பட்டு இருந்தது.
ஆனால், இந்தியாவில் தற்போது எழுந்துள்ள அரசியல் பிரச்சனை தெரியாமல் அவர் ஜேசிபி வண்டியில் ஏறி போஸ் கொடுத்தது இந்தியாவில் ஒரு சர்ச்சையாக மாறியது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை! ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பில் பேசுவார்...
It’s been a real pleasure to be in Gujarat today to see the fruits of the incredible partnership between the UK and our friends in India.
— Boris Johnson (@BorisJohnson) April 21, 2022
Today we have confirmed more than £1 billion in new investments between our two great countries, creating almost 11,000 new jobs in the UK. pic.twitter.com/dvR0OG775n
டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த இஸ்லாமிய வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பொலிஸார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன இதை மெய்ப்பிக்கும் வகையிலேயே, டெல்லி நகராட்சி நிர்வாகம் வன்முறை ஏற்பட்ட பகுதியில் உள்ள இஸ்லாமிய வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது என கூறி JCB எந்திரங்கள் கொண்டு இடித்துத் தள்ளியது.
மரியுபோலில் இருந்து 125 கி.மீ. நடந்தே சென்று உயிர் தப்பிய குடும்பம்! நடுவில் சந்தித்த துயரங்கள்..
பிறகு இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு கட்டட இடிபாடுகளை உடனே நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இஸ்லாமிய மக்களுக்கு எதிராக புல்டோசர் ஆயுதத்தை பா.ஜ.க அரசு கையில் எடுத்துள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் புல்டோசர் எந்திரத்தில் ஏறி போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.