உக்ரைன் மூதாட்டிக்கு உதவுவது போல ரஷ்ய வீரர் கொடுத்த பால் போத்தல்: உள்ளே இருந்த விடயத்தைக் கண்டு திகிலடைந்த குடும்பத்தினர்
உக்ரைனிடம் நேரடியாக மோதிப்பார்த்து வெல்ல முடியாத ரஷ்ய வீரர்கள் இப்போது புதிய யுக்திகளைக் கையாளுகிறார்கள்.
ஆம், உக்ரைன் மக்களுக்கு மனிதநேய உதவிகள் செய்வது போல நடிக்கத் துவங்கியுள்ளார்களாம் அவர்கள்.
இந்நிலையில், உக்ரைனிலுள்ள Kherson நகரில் ஆங்காங்கு ரஷ்யப் படைவீரர்கள் நல உதவிகள் வழங்கும் காட்சிகள் புதிதாக கண்ணில் படத் துவங்கியுள்ளன.
அப்படி ஒரு ரஷ்யப் படைவீரர் கொடுத்த பால் கார்ட்டனை (milk carton) வாங்கி வந்திருக்கிறார் ஒரு உக்ரைன் மூதாட்டி. ஆனால், அந்த கார்ட்டன் மூடி சரியாக மூடப்படாமல் இருந்ததைக் கவனித்துள்ளார் அவர்.
ஆக, யாரோ ஏற்கனவே அந்த கார்ட்டனை திறந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அந்த மூதாட்டி, அந்த கார்ட்டனின் மூடியை மெதுவாக அகற்ற அதனுள் ஒரு ஒயர் செல்வதைக் கவனித்துள்ளார் அவர்.
உடனே அதை தன் மகனிடம் அவர் கொண்டு காட்ட, அவரது மகன் அந்த கார்ட்டனை கவனமாக ஆராயும்போதுதான் அதற்குள் ஒரு வெடிகுண்டு இருப்பது தெரியவந்துள்ளது.
ஆக, இலவசமாக பால் விநியோகிப்பதுபோல, ஒரு பால் கார்ட்டனுக்குள் வெடிகுண்டு ஒன்றை வைத்துக் கொடுத்திருக்கிறார்கள் ரஷ்யப் படைவீரர்கள்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அதை அவர் வேகமாக திறக்காததால் அந்த மூதாட்டியின் குடும்பம் உயிர் தப்பியிருக்கிறது!