துருக்கி ஜனாதிபதிக்கு முன் சிறுவன் அவசரப்பட்டு செய்த செயல்! வைரலாகும் வேடிக்கையான வீடியோ
துருக்கியில் நடத்த ஒரு விழாவில் ஜனாதிபதிக்கு முன் சிறுவன் ஒருவன் அவசரப்பட்டு செய்த வேடிக்கையான செயலின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
துருக்கியில் ஒரு நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறப்பு விழாவின் ஒரு பகுதியாக இந்த சிறுவன் இருந்தார். இந்த சுரங்கப்பாதை நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனால் (Recep Tayyip Erdoğan) திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், ஜனாதிபதி ரெசெப் இந்த விழாவை துவங்கிவைக்கும் முன், பொறுமையை இழந்த அந்த சிறுவன் அவசரப்பட்டு ரிப்பனை வெட்டிவிட்டார்.
உடனடியாக தனது தவறை உணர்ந்த சிறுவன், அந்த இடத்தில் ரிப்பனைமீண்டும் இழுத்து பிடித்து வெட்டியதை மறைக்க முயற்சிக்கிறார். உடனே ஜனாதிபதி எர்டோகன் சிறுவனின் தலையில் தட்டி அவரிடம் பேசினார்.
A boy cut a ribbon during the opening ceremony for a highway tunnel in Turkey. That wasn’t such a big deal in itself, but that job had been reserved for Turkey’s president Tayyip Erdogan pic.twitter.com/dk0cNj3Yrp
— Reuters (@Reuters) September 5, 2021
இந்த சம்பவம் அங்கு எடுக்கப்பட்ட வீடியோவில் தெளிவாக பதிவானது. மேலும், இந்த வீடியோ தற்போது எதிர்பார்க்காத அளவிற்கு வைரலாகிவிட்டது. இந்த வீடியோ 2.6 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.